பொகவந்தலாவ-கெசல்கமுவ ஓயாவில் தவறி விழுந்து 10 வயது மாணவன் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவ லின்போட் (Lynford) தோட்டப் பாடசாலையில் தரம் 5-இல் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது தாத்தாவுடன் கால்நடைகளுக்காக உணவு கொண்டுவர சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










