இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.
காயம் காரணமாக அவர் குறித்த தொடரிலிந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியாவிற்கு தொடைத்தசைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஜூன் 13 முதல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் அவரால் பங்கேற்க முடியாது என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெங்களூருவில் உள்ள பிசிசி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் ஹர்திக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தங்களது உடற்தகுதியை நிரூபித்துள்ளதாகவும், தொடரில் விளையாடத் தயாராக இருப்பதாகவும் செவ்வாயன்று உறுதி செய்யப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரிலும் காயம் காரணமாக ஹர்திக் விளையாடாமல் இருந்தார்.
ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவுக்காக ஒரு ஒருநாள் போட்டியில் ஹர்திக் விளையாடவிருந்தார்.
ஆனால் தற்போது BCC தேர்வுக் குழு கடைசி நேரத்தில் அவருக்குப் பதிலாக ஒரு மாற்று வீரரை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.