டெல்லிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த உயர்மட்டச் சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போதுஇ தமிழ்நாட்டின் முக்கிய நிர்வாகக் கட்டமைப்புஇ மாநிலத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர்இ இரண்டாவது முறையாக டெல்லிக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜய்இ குடியரசுத் தலைவரைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு மலர்க்கொத்து வழங்கி கௌரவித்தார்.