தமிழ்நாட்டில் சிங்கப் பெண் அதிரடிப் படைக்காக அரசு சார்பில் முதல் கட்டமா ரூ.354 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்படுகிறது, இரண்டாவது கட்டத்துக்காக, 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளது என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கூறினார்.
பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை பிரிவை முதல்வா் ஜோசப் விஜய் இன்று தொடக்கி வைத்தார்.
தமிழக முதல்வராக ஜோசப் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றபோது, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கும் ஆணை உள்ளிட்ட 3 கோப்புகளில் கையொப்பமிட்டாா்.
இதன் தொடக்க விழா சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. விழாவில் பேசிய முதல்வர் விஜய், தமிழ்நாட்டில் சிங்கப் பெண் அதிரடிப் படைக்காக அரசு சார்பில் முதல் கட்டமா ரூ.354 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டத்துக்காக, 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன ரோந்து வாகனங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இயங்கி வரும் அமைப்புகளுக்கு பலம் கூட்டும் வகையில் இந்த சிங்கப் பெண் திட்டம் செயல்படுத்தப்படும்.