இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335 ரூபாய் முதல் 336 ரூபாய் வரை பதிவாகியுள்ளது.
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகளில் மாற்றம் ஏற்படவில்லை. இதன்படி, கொள்வனவு விலை 326.75 ரூபாயாகவும், விற்பனை விலை 336 ரூபாயாகவும் காணப்படுகிறது.
என்.டி.பி. (NDB) வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 326.40 ரூபாயிலிருந்து 326.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. விற்பனை விலையும் 335.40 ரூபாயிலிருந்து 335.50 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மக்கள் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 326.82 ரூபாயிலிருந்து 326.92 ரூபாயாகவும், விற்பனை விலை 334.92 ரூபாயிலிருந்து 335.03 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விலை 324.84 ரூபாயாகவும், விற்பனை விலை 334.75 ரூபாயாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது. சம்பத் வங்கியில் கொள்வனவு விலை 327 ரூபாயாகவும், விற்பனை விலை 335 ரூபாயாகவும் மாற்றமின்றிப் பதிவாகியுள்ளது.










