சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்துள்ளதாக இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் கணக்கில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை விதித்து பிறப்பித்த தீர்ப்பை, சவூதி உயர் நீதிமன்றம் 2026 அக்டோபர் 13 அன்று ரத்து செய்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான முயற்சிகளின் பலனாக இது கிடைத்துள்ளது என்றும், சிவராசாவுக்கு இது ஒரு மிகப்பெரிய நிவாரணம் என்றும் அருண் ஹேமச்சந்திரா கூறியுள்ளார்.










