Sri Lanka Tamil News Site

வாரிசு பட டீசர் வெளியாகும் திகதி

- Advertisement -

வாரிசு படத்தின் டீசர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளிவர அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக புத்தாண்டையொட்டி வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் – ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளா வாரிசு படத்தின் டீசர் எப்போது வெளிவரும் என்பது குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளியிடப்பட்ட ரஞ்சிதமே முதல்பாடல் யூ டியூபில் வியூஸ், லைக்ஸ்களை குவித்து வருகிறது. இந்நிலையில் டீசர் வெளியீடு குறித்த அப்டேட் வெளிவந்திருக்கிறது.

- Advertisement -

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் வாரிசு படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றுள்ளார். சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார்கள். ஃபீல் குட் படங்களுக்கு பெயர் போன தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடிபள்ளி வாரிசு படத்தை இயக்கியுள்ளார்.

தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் வாரிசு படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரித்துள்ளார். தற்போது இந்த படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்று பொங்கலையொட்டி வெளியீட்டிற்கு வாரிசு தயார் நிலையில் இருக்கிறது.

இந்த படத்துடன் அஜித்தின் துணிவு படமும் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு கோலிவுட்டில் காணப்படுகிறது. வாரிசு படத்தின் முதல் பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ள நிலையில், அடுத்த வாரம் இரண்டாவது பாடலை வெளியிட படக்ழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். துணிவு படத்திலும் ஓப்பனிங் மாஸ் பாடலை அனிருத் பாடியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!