இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த மழையுடன் வீசிய பலத்த காற்றினால் நவகமுவில் உள்ள தேவாலயம் ஒன்றின் பின்னால் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தினால் 4 க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.










