புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு அரச நிறுவனங்களில் வேதனம் பெற்ற குற்றச்சாட்டுக்கு அமைவாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இவர் கடந்த 2022 ஆம் ஆண்டில், ஓய்வுபெற்ற ஜனாதிபதி ஒருவரின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். அதே காலப்பகுதியில், அப்போதைய ஜனாதிபதி செயலகத்தின் திட்டப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவ்வாறாக ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ், ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளுக்கான வேதனத்தை பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.