ஐ.சி.சி ரி 20 மகளிர் உலகக் கிண்ணத்தின் 11ஆவது லீக் போட்டியில் பாக்கிஸ்தான் அணி தலைவர் பாத்திமா சனா இறுதி வரை போராடி தோல்வியை சந்தித்தார்.
இந்த போட்டியில் பாக்கிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பர்மிங்காமில் மோதின.
நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற பாக்கிஸ்த்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில்,அணியின் தலைவரான பாத்திமா சனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 55 ஓட்டங்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மேலும்,தென்னாபிரிக்கா தரப்பில் மரிசான் காப் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அத்துடன்,127ஓட்டங்கள் என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, 16.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
மேலும்,அந்த அணியில் அன்னரி டெர்க்ஸன் 52 ஓட்டங்களும் , நடினே டி கிளார்க் 37 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்நிலையில்,பாக்கிஸ்தான் அணி தலைவரான பாத்திமா சனா துடுப்பாட்டத்தில் 55 ஓட்டங்கள் பெற்றது மட்டுமின்றி, பந்துவீச்சிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனியாளாகப் போராடினார்.
அத்துடன்,பாத்திமா சனாவின் இந்த போராட்டம் வீணான நிலையில், பாக்கிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பை தொடரில் தனது இரண்டாவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.