போதைப்பொருள் வியாபாரி என்ற முத்திரை சமூகத்தால் வழங்கப்பட்டுள்ளது: பொலிஸ் மா அதிபர்

தனக்கு போதைப்பொருள் வியாபாரி என்ற முத்திரை சமூகத்தால் வழங்கப்பட்டதாகவும், எந்தத் தவறும் செய்யாத தனது பிள்ளைகளுக்கு போதைப்பொருள் வியாபாரியின் பிள்ளைகள் என முத்திரை குத்தப்பட்டதாகவும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி புனர்வாழ்வுத் திட்டத்தின் ஊடாக நுகேகொட மற்றும் களனி ஆகிய மூன்று பிரிவுகளில் மாத்திரம் போதைப்பொருள் பாவனையிலிருந்து சுமார் 1500 இளைஞர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணத்தில் களுத்துறை, பாணந்துறை, கம்பஹா மற்றும் நீர்கொழும்பு உட்பட இலங்கை முழுவதிலும் 285 நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் போதைப்பொருளுக்கு அடிமையான சுமார் 12,500 இளைஞர்களின் உயிரைக் காப்பாற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் என் வீட்டில், எந்தத் தவறும் செய்யாத என் பிள்ளைகள், போதைக்கு அடிமையான பிள்ளைகள் என்று முத்திரை குத்தப்பட்டனர். அத்துடன் போதைப்பொருள் வியாபாரியின் மனைவி என மனைவியை மக்கள் அவமானப்படுத்தினர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்