களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து பல கருவிகளையும் தண்டவாளங்கள் அமைப்பதற்காக பயன்படுத்தப்படும், உபகரணங்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
பொலிசாரின் தகவலின்படி ரயில் தண்டவாளங்களை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் மூன்று இரும்பு நெம்புகோல்களும், அவற்றை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கருவிகளும் சந்தேக நபரின் வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வனவாசலவைச் சேர்ந்த 27 வயதான குறித்த சந்தேக நபர், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ரயில்வே பாகங்களை அகற்றியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.