மஸ்கட் – ஓமானின் சினாஸ் துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பில், இந்திய மாலுமிகளுடன் பயணித்த ‘எம்.டி ஜல்வீர்’ என்ற வர்த்தகக் கப்பல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் குறித்து மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில், இந்த நிலவரம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக விபரங்களைத் திரட்டும் நோக்கில் ஓமான் நாட்டு அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.