இலங்கையில் இன்று வியாழக்கிழமை தங்க விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 8,000 ரூபாயால் குறைந்துள்ளது.
இதன்படி, தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 340,400 ரூபாயாக விற்பனையாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம் அடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 42,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக நகையக வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.