நாசா தனது அடுத்த முக்கிய நிலவுப் பயணமான “Artemis III” திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் குழுவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும், தொழில்நுட்பத் தாமதங்கள் காரணமாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஈலோன் மஸ்க்கின் ‘SpaceX’ நிறுவனத்தின் ‘Starship’ விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பத் தாமதங்களால், விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்கவோ அல்லது நிலவுக்கு அருகில் செல்லவோ மாட்டார்கள்.
இதனால் இந்த பயணம் பூமியின் கீழ்மட்டச் சுற்றுப்பாதையில் மாத்திரம் முன்னெடுக்கப்படும் ஒரு பரீட்சார்த்த தொழில்நுட்பத் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
ஜெஃப் பெசோஸின் ‘Blue Origin’ நிறுவனத்திற்குச் சொந்தமான ‘New Glenn’ விண்கலம் கடந்த மே 28ஆம் திகதி சோதனை ஓட்டத்தின் போது வெடித்ததால், அதன் ஏவுதளத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
சீனா 2030இலும், டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவின்படி அமெரிக்கா 2028இலும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளதால் நாசா கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், “Artemis III” திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் குழுவை நாசா அறிவித்துள்ளது. அதில்,
ராண்டி ப்ரெஸ்னிக் – விண்கலத் திட்டக் கட்டளையதிகாரி (Commander)
லூகா பார்மிட்டானோ – முதன்மை விமானி (Pilot – இத்தாலி)
அண்ட்ரே டக்ளஸ் மற்றும் ஃபிராங்க் ரூபியோ – விண்கலத் திட்ட நிபுணர்கள் (Mission Specialists)
பொப் ஹெய்ன்ட்ஸ் – மேலதிக அவசரக்காலக் குழு உறுப்பினர் (Backup crew) ஆகியோர் உள்ளனர்.
தற்போதைய கால அட்டவணையின்படி, இந்த ‘Artemis III’ விண்கலத் திட்டத்தை 2027ஆம் ஆண்டிலும், உண்மையான நிலவுத் தரையிறக்கங்களைக் கொண்ட ‘Artemis IV’ மற்றும் ‘V’ திட்டங்களை 2028ஆம் ஆண்டிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.