Sri Lanka Tamil News Site

இலங்கைக்கு வருகிறார் நடிகர் சூர்யா

- Advertisement -

தமிழக திரைப்பட நடிகர் சூர்யாவின் சூர்யா – 42 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இலங்கையிலும் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்திய செய்தி இணையத்தளங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கோவா – சென்னை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்புகளுக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் மத்தியிலேயே,  இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இலங்கையின் வனப்பகுதிகளில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சூர்யா – 42 திரைப்படம் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கதையை கொண்டிருக்கும் என சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திரைப்படத்தின் கதாநாயகியாக பொலிவூட் நடிகை திரிஷா பதானி நடிக்கவுள்ளார்.

2023ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையவுள்ளன.

ஐரோப்பாவின் பல்கேரியா – செர்பியா போன்ற நாடுகளும், கம்போடியா – வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிஜி ஆகிய நாடுகளிலும் மூன்று நாடுகள் படப்பிடிப்புக்காக தெரிவு செய்யப்படவுள்ளன.

பாரிய நிதி செலவில் தயாரிக்கப்படும் இந்தப்படத்தில் சூர்யா 5 கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்.

இரண்டு பாகங்களாக 10 மொழிகளில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது.

 

- Advertisement -