பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பேருந்தும், லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் – பொககவந்தலாவ பிரதான வீதியில், நோர்வூட் வென்சர் தோட்டம் பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் 7:10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பொகவந்தலாவவிலிருந்து ஹட்டனில் உள்ள பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துக்கு, எதிர் திசையில் ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது .
விபத்து நடந்த நேரத்தில், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட சுமார் 20 பேர் பேருந்தில் பயணித்துள்ளனர் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.