மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால், விமலசுரேந்திர நீர்த்தேக்கம் வான்பாய ஆரம்பித்துள்ளதுடன், கெஹெல்கமு ஓயாவின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளது.
கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக கொத்மலை – கம்பளை (B 431) பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நிலவும் அபாய நிலையை கருத்திற்கொண்டுm மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.