பாங்கொக்கில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 5 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ போதைப்பொருளுடன் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள், கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று புதன்கிழமை காலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 5.166 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்கமுவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.










