முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக போகொல்லாகம இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
எனினும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான மேலதிக விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.










