பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதற்கமைவாக, சட்டத்தரணிகளுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றப் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த ஆவணங்கள் மற்றும் தகவல்கள் தொடர்பான முன்னேற்றத்தை ஆராய்வதற்காக, எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி இவ்வழக்கு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் தங்களது சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக, ஒக்டோபர் 23 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இவ்வழக்கு மீண்டும் அழைக்கப்படவுள்ளது.










