ஹட்டன்-நோட்டன் பிரதான வீதியில், இன்று புதன்கிழமை காலை 7.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், நோட்டன் கணபதி வித்தியாலயத்தில் தரம் 8 கல்வி பயிலும் ஜெயராம் போல் ராஜ் (வயது 12) என்ற மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவன் இன்று காலை தனது இல்லத்தில் இருந்து விமல் சுரேந்திர நகருக்கு தனது துவிச்சக்கர வண்டியில் பயணித்த வேளையில், துவிச்சக்கர வண்டியில் பிரேக் இல்லாத காரணத்தால், கட்டுப்பாட்டை இழந்து எதிரே பயணித்த இ.போ.ச பேருந்துடன் மோதியுள்ளார்.
படுகாயமடைந்த மாணவன் உடனடியாக மீட்கப்பட்டு, டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நோட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.










