இந்த ஆண்டின்மூன்றாவது காலாண்டில் நோக்கியா நிறுவனத்தின் உபகரணங்களின் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இலாபமும் குறைந்துள்ளதாகவும் செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 14,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி நோக்கியாவில் தற்போது 86,000 ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் ஆட்குறைப்புக்கு பின்னர் 72,000 முதல் 77,000 வரையிலான ஊழியர்கள் பணியாற்றுவார்கள் என கூறப்படுகிறது.