கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மூன்று மாடி வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, கிராண்ட்பாஸ் லயார்ட்ஸ் பிராட்வே பகுதியில் அமைந்துள்ள வீட்டில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி, வீட்டின் மேல் மாடியிலிருந்து வீழ்ந்ததில் பலத்த காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, அவர் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிறுமி வீழ்ந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










