ஹொரவ்பொத்தானை, மதவாச்சி சந்திப் பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த 68 வயதுடைய பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, ஹொரவ்பொத்தானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மதவாச்சி சந்திப் பகுதியில் வசித்து வந்த குறித்த பெண், தனது வீட்டுக்கு முன்னால் சிறிய கடையொன்றை நடத்தி வந்ததுடன், சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகட்ட விசாரணைகளில் குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. எனினும், கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை அல்லது சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (படம் AI)










