-பதுளை நிருபர்-
பசறை நகரில் உள்ள பாக்கு, மிளகு, கருங்கா என்பன சேகரிக்கும் வியாபார நிலையம் ஒன்றை உடைத்து 4 லட்சம் ரூபாய்க்கு மேல் பெறுமதியான பாக்கு, மிளகு, கருங்கா ஆகியன களவாடப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை ஹிங்குருகடுவ வீதியில் பொது சந்தைக்கு அருகாமையில் உள்ள வியாபார நிலையம் ஒன்றே இவ்வாறு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்