அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை நாட்டின் பல வர்த்தக வங்கிகளில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை சில வங்கிகளில் 335 ரூபாயாக அதிகரித்துள்ளது.
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 326.25 ரூபாயாகவும், விற்பனை விலை 335.50 ரூபாயாகவும் தொடர்ந்தும் மாற்றமின்றி காணப்படுகிறது.
தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) டொலரின் கொள்வனவு விலை 326 ரூபாயிலிருந்து 326.50 ரூபாயாகவும், விற்பனை விலை 335 ரூபாயிலிருந்து 335.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 326.43 ரூபாயிலிருந்து 327.17 ரூபாயாகவும், விற்பனை விலை 334.52 ரூபாயிலிருந்து 335.28 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விலை 324.34 ரூபாயிலிருந்து 325.09 ரூபாயாகவும், விற்பனை விலை 334.25 ரூபாயிலிருந்து 335 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 326.50 ரூபாயிலிருந்து 327 ரூபாயாகவும், விற்பனை விலை 334.50 ரூபாயிலிருந்து 335 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.










