வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று செவ்வாய்க்கிழமை வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, பகல் நேரங்களில் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையான வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை எட்டும் வகையில் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் போதுமான அளவு நீர் அருந்தி உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்குமாறும், முடிந்தவரை நீண்ட நேரம் நேரடி சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.











