சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் மற்றும் எயார்பஸ் விவகாரம் தொடர்பான வழக்குகளுக்காக நாமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அதன்படி, முன்னதாக எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் அவரை எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ‘கிரிஷ்’ வழக்கில் நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.










