ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று செவ்வாய்க்கிழமை கடும் மின்னல் மற்றும் இடியுடன் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பல பகுதிகளில் கடும் மின்னலுடன் கூடிய இடியுடன் மழை பெய்யக்கூடும் எனவும், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.











