இலங்கை மொடலான எலினா குணவர்தன, நேற்று ஞாயிற்றுக்கிழமை லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற விக்டோரியா’ஸ் சீக்ரெட் (Victoria’s Secret) ஃபேஷன் ஷோவில் பங்கேற்று, இந்த நிகழ்வில் பங்கேற்ற முதல் இலங்கை மொடல் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற இந்த ஃபேஷன் நிகழ்வில், ஜிஜி ஹடிட், பெல்லா ஹடிட், அட்ரியானா லிமா, அலெஸாண்ட்ரா அம்ப்ரோசியோ, இரினா ஷேக், ஆஷ்லே கிரஹாம், அனோக் யாய், பலோமா எல்செஸர், பார்பரா பால்வின், அலெக்ஸ் கான்சானி மற்றும் கைலி ஜென்னர் உள்ளிட்ட சர்வதேச முன்னணி மொடல்கள் பங்கேற்றனர்.
மேலும், டேட் மெக்ரே, மேகன் தி ஸ்டாலியன், மேகன் மொரோனி மற்றும் KATSEYE ஆகிய இசைக் கலைஞர்களின் நேரடி இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
‘எலினா ஜி’ (Elina G) என்ற தொழில்முறை பெயரில் அறியப்படும் எலினா குணவர்தன, சர்வதேச ஃபேஷன் மேடையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
அவரது இந்த வரலாற்றுச் சாதனை, இலங்கையின் ஃபேஷன் துறைக்கு முக்கியமான சர்வதேச அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.










