ஆர்.ஜே. பாலாஜியின் மாறுபட்ட இயக்கத்திற்கு தியேட்டர்களில் குவியும் பாராட்டுகள்.
த்ரிஷா, ஸ்வஸ்திகா நடிப்பில் பல தடைகளுக்குப் பின் வெளியாகி அசுர வேட்டை ஆடும் ‘கருப்பு’.
பல தடைகளைக் கடந்து கடந்த 15-ஆம் தேதி வெளியான சூர்யா – ஆர்.ஜே.பாலாஜியின் ‘கருப்பு’ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு மூன்றே நாட்களில் உலகளவில் 147 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இமாலய வெற்றி பெற்றுள்ளது!
மொத்த வசூலில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மட்டும் ₹60 கோடியாக உள்ளது. வார நாட்களிலும் (Weekdays) இதே வேகம் தொடர்ந்தால், இத்திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.