இலங்கை நாடாளுமன்றத்தின் பொது நிதிக் குழுவிற்கு (Committee on Public Finance – CoPF) சிரேஷ்ட ஆலோசகர் பதவிக்குத் தகுதியான இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, பொது நிதி முகாமைத்துவம், பொதுக் கொள்கை, பொது நிர்வாகம், பொருளாதாரம் அல்லது தொடர்புடைய துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருப்பதுடன், சிறந்த பகுப்பாய்வு மற்றும் ஆய்வுத் திறன்களையும் விண்ணப்பதாரர்கள் கொண்டிருக்க வேண்டும்.
இலங்கை நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 121 இன் கீழ் பொது நிதிக் குழு செயற்பட்டு வருகின்றது.
விண்ணப்பிக்க விரும்புவோர் தமது விண்ணப்பங்களைப் பதிவுத் தபால் மூலம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள்:
செயலாளர் நாயகம்,
இலங்கை நாடாளுமன்றம்,
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் 2026 நவம்பர் 13 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கப்பெற வேண்டும் என நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் கடித உறையின் மேல் இடது மூலையில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பதவி தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்ப நிபந்தனைகளை இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.parliament.lk இல் பெற்றுக்கொள்ள முடியும்.










