வெலிகம, மிதிகம பிரதேசத்திலுள்ள புகையிரதக் கடவையொன்றில், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) உத்தியோகத்தர்கள் பயணித்த ஜீப் ரக வாகனம் ஒன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலுடனேயே குறித்த ஜீப் ரக வாகனம் இவ்வாறு மோதியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த நான்கு உத்தியோகத்தர்கள் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










