-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மிருசுவில் பகுதியில், துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










