திருகோணமலை, கோட் பே மீன்பிடித் துறைமுகப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ரயிலில் மோதுண்டு இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலில், ரயில் பாதையில் நின்றுகொண்டிருந்த மூவரும் மோதுண்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த ஏனைய இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், அவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் மாத்தறை மற்றும் தொண்டா பகுதிகளைச் சேர்ந்த 48 மற்றும் 58 வயதுடைய இரு மீனவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களின் சடலங்கள் திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










