அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை நாட்டின் வர்த்தக வங்கிகளில் சற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை சில வங்கிகளில் குறைவடைந்து 336 ரூபாவை அண்மித்துள்ளது.
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இதன்படி, கொள்வனவு விலை 328.50 ரூபாவாகவும், விற்பனை விலை 337.75 ரூபாவாகவும் காணப்படுகிறது.
NDB வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை கடந்த வெள்ளிக்கிழமை 328.30 ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், இன்று 327.90 ரூபாவாகக் குறைந்துள்ளது. விற்பனை விலையும் 337.30 ரூபாவிலிருந்து 336.90 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.
மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 328.50 ரூபாவிலிருந்து 328.45 ரூபாவாகவும், விற்பனை விலை 336.65 ரூபாவிலிருந்து 336.59 ரூபாவாகவும் குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 326.82 ரூபாவாகவும், விற்பனை விலை 336.75 ரூபாவாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
சம்பத் வங்கியிலும் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகளில் மாற்றம் ஏற்படவில்லை. இதன்படி, கொள்வனவு விலை 328.75 ரூபாவாகவும், விற்பனை விலை 336.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.










