கல்கிசை கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடலில் நீராடியபோது நீரில் மூழ்கி 43 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, நேற்று மாலை கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது குறித்த நபர் நீரில் சிக்கித் தத்தளித்துள்ளார்.
இதன்போது, கல்கிசை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அவரை மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அவருக்கு ஆரம்பக்கட்ட முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.










