பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை நவம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டதுடன், மேலதிக சாட்சி விசாரணையை நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
730 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டு தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் அமைந்துள்ள 05 காணிகளை கொள்முதல் செய்ததன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் கூறி, சட்டமா அதிபரால் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.










