திருகோணமலை மாவட்டம், கந்தளாயில் அமைந்துள்ள தி/கந்/பேராறு பரமேஸ்வரா மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் விழா நேற்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் கல்வி வளர்ச்சியையும் மாணவர்களின் கல்வி அடைவுகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக தி/சண்முகா தேசிய பாடசாலையைச் சேர்ந்த திரு. மதி.வி.ரவிராஜன் (ஓய்வுபெற்ற அதிபர்) கலந்து சிறப்பித்தார்.
கௌரவ விருந்தினர்களாக திரு. க.லிங்கராஜா (சிங்கன்) மற்றும் திரு. பா.இந்திரராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், சிறப்பு விருந்தினர்களாக திருமதி கொ.பத்மலோஜினி மற்றும் திரு. இ.சிவகணேஷ் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இதன்போது, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டுகளும் கௌரவங்களும் வழங்கப்பட்டதுடன், அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் பங்களிப்பும் பாராட்டப்பட்டது.












