யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் மாணவர்களின் விஞ்ஞான- வர்த்தக தின நிகழ்வுகள், நேற்று வியாழக்கிழமை காலை 11:00 மணியளவில் கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை ஏ.பி திருமகன் அடிகளாரின் தலைமையில் இடம் பெற்றது.
பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட விஞ்ஞான வினா- விடைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தால் வருடா வருடம் வெளியிடப்படும் “பரிணாமம்” இதழ் -7 வெளியிடூம் இடம்பெற்றதோடு வணிக மாணவர் மன்றத்தால் உயர்தரப் பிரிவு வணிக மாணவர்களுக்கான எதிர்பார்க்கை வினா- விடைக்களுடன் கூடிய வினாவிடைத் தொகுப்பு நூல் வெளியீடும் , “இன்றைய தொழிநுட்ப பெரும் புரட்சியுக போக்கின் அடிப்படையில் எதிர்கால உலகை முற்போக்குடன் வழி நடத்த வல்லது விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்களா?அல்லது வணிக முதலீடுகளா?” எனுன் தலைப்பில் மாணவர்களின் பட்டிமன்ற நிகழ்வும் இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு யாழ்ப்பாண பல்கலைக் கழக முகாமைத்துவ வணிக பீடப் பேராசிரியர் எஸ்.ரஜுமேஷ் பிரதம விருந்தினராகவும், சமுர்த்தி மகா சங்க பிரதி முகாமையாளரும் யாழ்ப்பாண கம்பன் கழக செயலாளருமான சொல்லருவி ரி.கருணாகரன் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அயற் பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.














