அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி, நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை பெரும்பாலான வர்த்தக வங்கிகளில் குறிப்பிடத்தக்க மாற்றமின்றி நிலவுகிறது.
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.25 ரூபாவாகவும், விற்பனை விலை 337.50 ரூபாவாகவும் மாற்றமின்றிப் பதிவாகியுள்ளது.
NDB வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 328 ரூபாவாகவும், விற்பனை விலை 337 ரூபாவாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
மக்கள் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 328.45 ரூபாவிலிருந்து 328.55 ரூபாவாகவும், விற்பனை விலை 336.59 ரூபாவிலிருந்து 336.70 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 326.58 ரூபாவாகவும், விற்பனை விலை 336.50 ரூபாவாகவும் மாற்றமின்றி நிலவுகிறது.
சம்பத் வங்கியில் டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 328.50 ரூபா மற்றும் 336.50 ரூபாவாக மாற்றமின்றிப் பதிவாகியுள்ளன.










