மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் “டொக்சிக்”.
இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, சுதேவ் நாயர், அக்ஷய் ஒபராய் மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி வெளியாகவிருந்த திரைப்படம் ஜூன் 4 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது “டொக்சிக்” திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகாது என்றும் விரைவில் வெளியீட்டு திகதி அறிவிக்கப்படும் என்றும் நடிகர் யஷ் தெரிவித்துள்ளார்.