காலி மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலேகஸ்பலாத்த பகுதியில், மைக்ரோ ரகத் துப்பாக்கி மற்றும் ஹெரோயினுடன் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, அவரது வீட்டை பொலிஸார் சோதனையிட்டனர்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து, மைக்ரோ ரகத் துப்பாக்கி, 2 தோட்டாக்கள், 3,100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் பெலேகஸ்பலாத்த பகுதியைச் சேர்ந்த மஹப்பு கங்கானம்கே விமுக்தி சம்பத் (வயது 36) என்பவரே கைது செய்யப்பட்டு கொஸ்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று திங்கட்கிழமை பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க கொஸ்கொட பொலிஸாரும் காலி மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.










