-மன்னார் நிருபர்-
மன்னார் யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதி பள்ளமடு பகுதியில், இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முழங்காவில் பகுதியில் இருந்து, தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணியாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த சிறிய ரக பேருந்து, பள்ளமடு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது, பேருந்தில் பயணித்த 20 பேரில் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










