மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து இன்று வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாக மலையகத்திற்கான ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மண்மேட்டை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்