இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேயில், மது அருந்திவிட்டு வாகனம் செலுததிய 28 வயது இளைஞருக்குப் புனே மோட்டார் வாகன நீதிமன்றம் ஒரு நூதனமான தண்டனையை விதித்துள்ளது.
புனேயின் ஹின்ஜாவாடி பகுதியில் கடந்த ஜூலை 22 ஆம் திகதி குறித்த நபர் மதுபோதையில் வாகனம் செலுத்திய நிலையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து, இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிக்கு இந்த நீதிமன்றத்தில் குறித்த நபர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன், இந்த அபராதத்துடன் சேர்த்து, “மது அருந்தி வாகனம் ஓட்டுவதன் ஆபத்துகள்” குறித்த விழிப்புணர்வு அடங்கிய 1,000 துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு, நகரத்தின் போக்குவரத்து சமிக்ஞைகளில் உள்ள வாகன சாரதிகள் மத்தியில் விநியோகிக்க வேண்டும் என்று அவருக்கு உத்தரவிட்டது.