‘மீனாகய’ ரயிலில் உள்ள சிற்றுண்டிசாலையில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலையில் குடிநீர் போத்தல்களை விற்ற விற்பனையாளர் ஒருவருக்கு, மாளிககந்த நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை 100,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.
1000 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தலுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை 100 ஆகும். எனினும் குறித்த விற்பனையாளர், அந்த தண்ணீர் போத்தலை 160 ரூபாய்க்கு, கொழும்பிலிருந்து மட்டக்களப்பு செல்லும் ரயில் பயணிகளிடம் விற்றுள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி ஒருவர், பயணி போல் நடித்து, அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட தண்ணீர் போத்தலை வாங்கிய பின்னர், அதிரடியாக சோதனை நடவடிக்கையை முன்னெடுத்து குறித்த வியாபாரியை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.