தம்புள்ளை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், காலாவதியான குடிநீர் போத்தல்களை அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக, தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் குறித்த உணவகத்துக்கு 5,10,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.
மாத்தளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது இந்த விடயம் கண்டு பிடிக்கப்பட்டு, அதிகாரிகளால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த உணவகம், 15 மார்ச் 2026 அன்று காலாவதியாகும் தண்ணீர் போத்தல்களை விற்றதுடன், குறித்த தண்ணீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை 80 ரூபாயாக இருந்தபோதிலும், அது 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது, என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
உணவகத்துக்கு எதிராக அதிகாரிகள் வழக்கு தாக்கல் செய்த போது, நீதிமன்றம் 5,10,000 ரூபா அபராதம் விதித்தது.
உணவு அல்லது பானங்களை வாங்குவதற்கு முன், நுகர்வோர் எப்போதும் காலாவதி திகதிகளைச் சரிபார்க்க வேண்டும் என்றும், பொருட்களில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக பணம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், நுகர்வோர் விவகார அதிகாரசபை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.