மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி ,மோட்டார் சைக்கிள் விபத்தை அடுத்து பொலிசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
கல்லடி மணிக்கூட்டு சந்தி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக முழுமையான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.